இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், மாருதி சுஸூகி. 'BSVI மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வருவதால், 2020-க்குப் பிறகு டீசல் இன்ஜின்களைக் கைவிடப்போகிறோம்' என்று மாருதி சுஸூகி அறிவித்துள்ளது. மாருதியின் இந்த முடிவு, கார் விற்பனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.