சித்திரை அமாவாசையினை வசந்த ருது என அழைப்பது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து புனித நீராடுவது வழக்கம். இன்று அமாவாசை தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான யாத்திரைவாசிகள் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.