இறைவனே வாணிகம் செய்யும் செட்டியாராக தராசுக்கோலை ஏந்த, அம்பாள் படியளந்து வியாபாரம் செய்யும் வணிக உற்சவப் பெருவிழா, நேற்று அய்யம்பேட்டையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு மட்டுமே நடைபெறுவதால், ஏராளமான வணிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.