`சுட்டக் கதை', `நாய்கள் ஜாக்கிரதை', `பலே பலே மக்டிவோய்' மற்றும் `நேனு லோக்கல்' படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகும் படம் `செவன்'. புதுமுக நடிகர் ஹவிஷ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரஹ்மான், ரெஜினா, நந்திதா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.