உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 டன் கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மலையில் சேகரிக்கப்படும் இவற்றைக் கீழே கொண்டு வர ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. காலியான ஆக்சிஜன் குடுவைகள், சமையல் கழிவுகள், பீர் பாட்டில்கள் மற்றும் மனிதக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான குப்பைகள் இதில் அடக்கம்.