அதர்வா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், `100'. இந்தப் படம் இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அருண் பாலாஜி படத்தின் மீது தடை வாங்கியிருந்ததால் படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. தடையை நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளதை தொடர்ந்து நாளை படம் ரிலீஸாக உள்ளது.