முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இங்கிலாந்தின் புகழ்பெற்ற, 259 ஆண்டுகள் பழைமையான ஹம்லேஸ் பொம்மைகள் சில்லறை விற்பனையகத்தை கையகப்படுத்துகிறது. ஹம்லேஸ் நிறுவனத்தை 2015-ல் வாங்கியிருந்த சீனாவின் சி பேனர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து ரூ.620 கோடிக்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கைமாறுகிறது.