இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியான கோலன் ஹைட்ஸில், நேற்று காலை எட்டுக் கழுகுகள் இறந்துகிடந்துள்ளதாக அந்நாட்டு இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது, அப்பகுதியில் உள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும், விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாடு கூறியுள்ளது.