நீல்ஸ் ஹோகொல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆண் செவிலியர். டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க முயற்சி செய்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் தற்போது ஒத்துக்கொண்டுள்ளார்.