ஐபிஎல் பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோப்பையை வெல்ல 150 ரன்கள் இலக்குடன் சென்னை களமிறங்கவுள்ளது.