"அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டால் உண்டு, இல்லையென்றால் 2020-ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விடும்", என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் மோதலாகி வரும் சூழ்நிலையில் ட்ரம்ப் இப்படி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.