சென்னையின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தோனியின் ரன் அவுட், அவுட் இல்லை எனவும் சிறுவன் ஒருவன் தேம்பித் தேம்பி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சிறுவனின் தாய் அவர்கள் தோற்றத்துக்கு நீ ஏன் அழுகிறாய் எனக் கேட்க ``தோனி அவுட்டே இல்லை. சும்மாதான் அவுட்டுன்னு கொடுக்குறாங்க'' எனக் கூறி அம்பயருக்கு சாபம் கொடுக்கிறான்.