நேற்று மாலையில் இலங்கையின் சிலாபம், பிங்கிரி, குளியாப்பிட்டி போன்ற இடங்களில்  கலவரம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்ட சர்ச்சையான கருத்தைத் தொடர்ந்து இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது என்பதால் தற்போது சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.