சமீபத்தில் ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியன் ஆசாஞ்சே மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஸ்வீடன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன என்று ஸ்வீடன் நாட்டின் அதிகாரி கூறியுள்ளார். இது மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.