நாயகியாக அஞ்சலி நடித்திருக்கும் திரைப்படம் 'லிசா'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் திகில் படமான இதனை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்க, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.