ஐ.சி.சி தொடர் என்றாலே எப்படி சிறப்பாக விளையாடுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷிகர் தவான், ``ஐ.சி.சி தொடர்கள் என்று வந்துவிட்டாலே எனது ரெக்கார்டுகள் குறித்துப் பேசுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனது நோக்கம் எப்போதும் ஒன்றுதான். எல்லா போட்டிகளிலும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.