தோனியின் மனநிலை குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான், `பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு கும்ப்ளே ரூ 10,000 அபராதம் கட்ட வேண்டும் எனச் சொல்ல, தோனியோ ஒருவர் லேட்டாக வந்தாலும் அனைவரும் தலா ரூ. 10,000 கட்ட வேண்டும் என சொன்னார். அதன் பின்னர் யாரும் தாமதமாக வருவதில்லை’ என்றார்,