சச்சின் தனது பால்ய நண்பரான வினோத் காம்ப்ளியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். சச்சின் பந்துவீசும்போது க்ரீஸுக்கு வெளியே காலை வைத்துவிட்டார். ஐசிசி அந்தப் படத்துடன் அம்பயர் நோ-பால் சிக்னல் காட்டும் படத்தையும் இணைந்து கமென்ட் செய்தது. இது தற்போது வைரலாகி வருகிறது.