காஞ்சிபுரம் ஶ்ரீதேவராஜ ஸ்வாமிகள் திருத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை, 19.5.2019 அன்று நடைபெறும். இங்கு வழிபட்டால், பெண்களின் உடல் சார்ந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை!