தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால் அந்தத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சூலூரில் பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் வீட்டுக்குச் சென்று பணம் வழங்குவதில்லை. மாறாக கோட் வேர்டு, இடம் அனைத்தும் சொல்லி ரகசியமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.