அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இரவில் வாக்கிங் சென்ற பெண் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் அப்பெண்ணை துப்பாக்கியால் 5 முறை சுட்டுள்ளார், இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.