`அ.தி.மு.க  டெண்டர் கட்சியாக உள்ளது. ஆனால், அ.ம.மு.க தொண்டர்களின் கட்சியாக இருக்கிறது. தி.மு.க-வுக்கு அ.ம.மு.க உதவி செய்வதாக எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க-வை காலி செய்தோம். ஓட்டப்பிடாரத்தில் மட்டும் எப்படி தி.மு.க-வை ஜெயிக்க உதவி செய்வோம்?” என தினகரன் கேள்வி எழுப்பினார்.