கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில் உள்ள ஆத்திஸ்வர ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் அமுது படையல் விழா விமரிசையாக நடைபெறுகிறது. நூதன முறையில் நடைபெறும் இந்த விழாவுக்குக் குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் குவிகின்றனர்.