ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் காம்போ முதன்முதலாகக் கூட்டணி அமைத்திருக்கும் படம் 'தர்பார்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 15-ம் தேதி முடிந்திருந்தது. 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து 'தர்பார்' படத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடலை முழுக்கவே பாடியிருக்கிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.