`அயோக்யா' படத்தில் ராஷி கண்ணாவுக்குப் பின்னணி குரல் கொடுத்தது பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி. அதற்காக தன் பெயர் கிரடிட் லிஸ்டில் இல்லை என மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ரவீனா ட்வீட்டைப் பார்த்த ராஷி இதுகுறித்து மன்னிப்புக் கேட்டும், தன் நடிப்புக்கு ரவீனா குரல் அழகு சேர்த்துள்ளது எனவும்  பதிலளித்துள்ளார்.