ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம் 'காஞ்சனா' முதல் பாகம் இந்தியில் தயாராகிறது. இதில் ஹீரோவாக நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.  'லக்ஷ்மி பாம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கூடவே அடுத்த வருடம் ஜூன் 5ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.