காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை,  அது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசணையும் நடத்தவில்லை எனக் கூறி அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் ராகவா லாரன்ஸ்.  ‘ பணம்,பெயர், புகழைக் காட்டிலும் சுயமரியாதை என்பது மிகவும் முக்கியமானது’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.