பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்குப் பாராட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது.  இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கூட்டியது. இளையராஜா - வைரமுத்து இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், அரங்கில் கூடியிருந்த பிரபலங்கள் பலரும் ஆச்சர்யத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.