‘ மன்னிப்பு கேட்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம். இது தவறாக எனக்குத் தோன்றவில்லை. ட்வீட் சர்ச்சை பற்றி அந்தப் படத்தில் இருப்பவர்களே இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை’ என சர்ச்சை ட்வீட் பற்றி விவேக் ஓபராய் விளக்கமளித்துள்ளார்.