மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். ரிலையன்ஸ் ரூ. 6.23 லட்சம் கோடியும் ஐஓசி ரூ. 6.17 லட்சம் கோடியும் டர்ன் ஓவர் செய்துள்ளது.