சர்ச்சைக்குரிய போயிங்கின் 737 MAX விமானங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புகள் இருப்பது ஐரோப்பிய விமானிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் FAA-வின் சோதனையை மட்டும் நம்பாமல் ஐரோப்பிய யூனியனும் தன்னிச்சையாக சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என ECA கருத்து தெரிவித்திருக்கிறது.