ஜப்பானில் உள்ள கவாசகி (Kawasaki) என்ற நகரத்தில் இன்று காலை பேருந்து நிறுத்தம் ஒன்று மர்ம நபர் ஒருபர் திடீரென கத்தியைக் கொண்டு சரமாரியாக அங்கிருந்தவர்களை தாக்கினார். இந்த தாக்குதலில் 2 பேர் பலியாயினர். 15 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இறுதியில் அந்த மர்ம நபர் தன்னை தானே குத்தி தற்கொலையும் செய்துகொண்டார்.