உலக அளவில் ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் அதிகமானோர் புகையிலை  பாதிப்பினால் இறக்கின்றனர். அதில், 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நேரடியாக புகையிலையைப் பயன்படுத்துவதாலும்,  10 லட்சத்துக்கும் அதிகமானோர், மற்றவர்கள் பிடிக்கும் புகையை சுவாசிப்பதால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.