சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலிக்கு எதிர்பாராதவிதமாகக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வறைக்குச் சென்று விட்டார். விராட்டின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.