நேற்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறந்தாளையொட்டி சென்னையில்  ‘இசை கொண்டாடும் இசை’ என்ற பெயரில்  ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்துக்குக் கட்டடம் கட்டும் பொறுப்பைத் தான் ஏற்பதாக அந்த விழாவில் அறிவித்தார் இளையராஜா.