இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கெதிரான போட்டிகளில் இந்திய அணி, ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நிற ஜெர்ஸியுடன் இரு அணிகள் இருக்கும்போது குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் 2ஜெர்ஸிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி.