`இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு மாசுபாடுகள், சுகாதாரம் பற்றிய அக்கறையே இல்லை. அவர்களிடம் தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர் கிடையாது. நீங்கள் இந்த நாடுகளுக்குச் சென்றீர்கள் என்றால், உங்களால் சுவாசிக்கக்கூட முடியாமல் போகலாம். மாசுபாட்டைக் கையாள்வதில் அவர்கள் ரொம்ப மோசம்’ என அதிபர் டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.