ஒவ்வோர் ஆண்டும் ரம்ஜான் தினத்தில், லாகூரின் கடாஃபி  மைதானத்தில் பிரமாண்டமாக தொழுகை நடைபெறும். மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தலைமையில் நடக்கும் தொழுகைக்கு அனுமதி மறுத்துள்ளது பஞ்சாப் மாகாண அரசு.