தஞ்சாவூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சமூக ஆர்வலரான ஆனந்த்பாபு அடித்துக் கொல்லப்பட்டார். அந்தக் குடும்பத்துக்கே ஜீவாதாரமாக இருந்த ஆனந்த்பாபு இறந்துவிட்டதால் வாழ்வதற்கு இனி என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் நிற்கதியாய் நிற்கிறது அவரின் குடும்பம். அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.