ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா. உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 20 ரன்களை கடந்தபோது இந்த சாதனை செய்தார். இதை வெறும் 37 இன்னிங்ஸில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.