சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரு தலைமைதான் இருக்க வேண்டும் என நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உட்கட்சி விவகாரங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அ.தி.மு.க-வினருக்கு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.