சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தபோது அங்கு வந்த அவரின் மகன், ‘தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது' என்று கத்தினார். தமிழிசை மகனே பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சுகநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.