பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் முடிகிறது. இதனையொட்டி அற்புதம்மாள் இன்று காலை ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டிருந்தார். இதற்கிடையே சென்னை டிரெண்டில் காலை முதல் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது. 7 பேர் விடுதலையை வலியுறுத்தி இந்த ஹேஷ்டேக் டிரெண்டு செய்யப்பட்டு வருகிறது.