உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது கையில் காயமடைந்த தவான், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்யவே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.