விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளராக இருந்த இன்பத்தமிழன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க.வில் இன்று இணைந்தார். இதுதொடர்பாக பேசிய இன்பத்தமிழன் ‘ தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்.வேறு காரணம் எதுவும் இல்லை. இன்னும் ஒருவாரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கூண்டோடு காலியாகிவிடும்'' என்றார்.