மக்களவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. 22 எம்.பி-க்களை வைத்துள்ள ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியைக் கொடுக்க பா.ஜ.க முன்வந்துள்ளதாக கூறபடுகிறது. இது குறித்து கட்சி சீனியர்களிடம் ஜெகன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.