அ.தி.முக. நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. இதில் சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கலைச்செல்வன், ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதேபோல் குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் உடல்நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.