உலகின் சக்திவாய்ந்த பிராண்டு எது என்பது ஒவ்வோர் ஆண்டும் டெக் உலகை ஆட்டுவிக்கும் ஒரு கேள்வி. கடந்த 12 ஆண்டுகளாக கூகுளும் ஆப்பிளும் மட்டுமே மாறி மாறி முதலிடத்தில் இருந்தன. சென்ற ஆண்டு கூகுள் முதலிடத்திலும் ஆப்பிள் இரண்டாமிடத்திலும் இருந்தன. இந்த ஆண்டு இரண்டு பிராண்டையும் ஓவர்டேக் செய்து அமேசான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.