புதுவைக்கு அருகேயிருக்கும் பஞ்சவடியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில், 36 அடி உயர பிரமாண்ட விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வரும் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் 4,00,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.