இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக் கோப்பை போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியைக் காண தமிழ் திரை நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் நேரில் சென்றிருக்கின்றனர். இந்திய அணியின் ஜெர்ஸியுடன் அவர்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.